This page uses content from Wikipedia and is licensed under CC BY-SA.
செய்தியை பெற வேண்டியவர் மட்டுமே அறியும்பொருட்டு நுட்பங்களைக் கொண்டு செய்தியை மாற்றி அனுப்புதலே கிரிப்டோகிராபி. பண்டைய காலத்தில், ஜூலியஸ் சீசர் பயன்படுத்திய நுட்பமே அவர் பெயரால் வழங்கலாயிற்று. இதில், ஒவ்வொரு ஆங்கில எழுத்தையும் மற்றோர் எழுத்தாக மாற்ற வேண்டும். மாற்றுவதற்கு ஒரு எண்ணை உதவிக்குக் கொள்ளலாம். அந்த எண்ணை எழுத்தின் அகரவரிசை எண்ணுடன் கூட்டி வரும் எண்ணை எழுதவும். இந்த ரகசிய எண் அனுப்பியவருக்கும், பெறுபவருக்கும் மட்டுமே தெரிந்திருக்க வேண்டும். செய்வதற்கு எளிமையான இம்முறையில், பாதுகாப்பு கேள்விக்குட்பட்டது. 1 முதல் 25 வரை ஏதேனும் ஒரு எண்ணை அனுப்பியவர் செய்தியுடன் கூட்டினால், வெறும் 26 சோதனைகளில் செய்தியைக் கண்டறியலாம்.
Plain (பொது): ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ குறியாக்கம் (Cipher): XYZABCDEFGHIJKLMNOPQRSTUVW